தேன்கனிக்கோட்டை அருகே - சிற்றுந்து கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு; 19 பேர் காயம் :

தேன் கனிக்கோட்டை அருகே சிற்றுந்து கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 19 பேர் காயம் அடைந்தனர்.

தேன்கனிக்கோட்டை அடுத்த பண்டேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டவர்கள், நேற்று முன்தினம் அகலக்கோட்டை மலைக் கிராமத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் அதே வாகனத்தில் பண்டேஸ்வரம் கிராமத்துக்கு புறப்பட்டனர்.

இரவு 12 மணியளவில் ஒசட்டி கிராமத்தின் அருகே சிற்றுந்து வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில், பண்டேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த சவுடரெட்டி( 60) மற்றும் காந்தராஜ் என்பவரின் மகன் கிரண்(12) ஆகிய இருவரும் வாகனத்தின் அடியில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற தேன்கனிக்கோட்டை போலீஸார், காய மடைந்தவர்களை மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேன் கவிழ்ந்து 11 பேர் காயம்

கோவை மாவட்டம் சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த 11 பேர் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று சுற்றுலா வந்தனர். ஒகேனக்கல்லின் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த பின்னர் நேற்று மாலை ஊர் திரும்ப சுற்றுலா வேனில் புறப்பட்டனர்.ஒகேனக்கல்லில் இருந்து சுமார் 6 கிமீ தூரம் பயணித்த நிலையில், மலைப்பாதை வளைவில் வேன் திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது.

இதில், வேனில் இருந்த 11 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற ஒகேனக்கல் போலீஸார், காயமடைந்தவர் களை மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்