நார்த்தம்பட்டியில் கோமாரி தடுப்பூசி முகாம் :

நல்லம்பள்ளி அடுத்த நார்த்தம் பட்டியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

நல்லம்பள்ளி வட்டம் நார்த்தம்பட்டி ஊராட்சியில் கால்நடை களுக்கு கோமாரி நோய் தாக்கம் அதிக அளவில் இருந்தது. எனவே, கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நார்த்தம்பட்டி கிராமத்தில் கோமாரி தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

பின்னர், கோமாரி நோயில் இருந்து கால்நடைகளை காக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கோமாரி பாதிப்புக்கான அறிகுறிகள், அறிகுறி தென்பட்டால் பின்பற்ற வேண்டிய பராமரிப்பு முறைகள் உள்ளிட்டவை குறித்து கிராம மக்களுக்கு கால்நடை துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

“கால்நடை மருத்துவர்களின் அறிவுரைகளை கேட்டு கால்நடைகளை கோமாரியில் இருந்தும், நோயால் ஏற்படும் உயிரிழப்பில் இருந்தும் கால்நடை வளர்ப்போர் காத்துக் கொள்ள வேண்டும்” என பொதுமக்களுக்கு எம்எல்ஏ அறிவுரை வழங்கினார்.

முகாமில், பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர் அன்புகார்த்திக், ஊராட்சித் தலைவர் கலைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்