மன்னார்குடி துணை மின்நிலையத்தில் கூடுதல் திறன்கொண்ட புதிய மின்மாற்றி :

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வடசேரி சாலையில் அமைந்துள்ள நகர துணை மின் நிலையத்தில், நகரத்தில் பெருகி வரும் மின் தேவையை கணக்கில் கொண்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ரூ.1 கோடி செலவில் 8,000 கிலோ வோல்ட் திறன் கொண்ட புதிய கூடுதல் திறன் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மின்மாற்றியின் செயல்பாடுகளை மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா நேற்று தொடங்கிவைத்தார். இதனால், மன்னார்குடி நகரில் மின்வாரிய நகர், வசந்தம் நகர், காமராஜர் நகர், ராஜகோபாலசாமி நகர், மோர் குளம் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து மின்சார வசதிபெறும் 3,000 பேர் பயனடைவர்.

முன்னதாக, மின்வாரியத்தில் பணிபுரியும்போது உயிரிழந்தவர்களின் வாரிசுகள் 6 பேருக்கு பணி நியமன ஆணையை எம்எல்ஏ வழங்கினார். நிகழ்ச்சிக்கு, திருவாரூர் மேற்பார்வை பொறியாளர் சீ.கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பொது செயற்பொறியாளர் டி.காளிதாஸ், மன்னார்குடி செயற்பொறியாளர் கி.ராதிகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்