தென்காசியில் மாவட்ட அளவில் போட்டி - முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு :

பள்ளிக்கல்வித் துறை, தென்காசி வ.உ.சி. வட்டார நூலகம், ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் மற்றும் வெற்றி ஐஏஎஸ் அகாடமி சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.

போட்டிகளில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர் களுக்கு தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தில் வைத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்றார். தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சுடலை, குற்றாலம் ரோட்டரி சங்கத் தலைவர் பிரகாஷ், ரோட்டரி சங்கச் செயலாளர் கார்த்திக்குமார் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினர்.

கட்டுரைப் போட்டியில் ஊராட்சி ஒன்றிய பள்ளி திருச்சிற்றம்பலம் மாணவி கீதா முதல் பரிசும், காட்டுபாவா நடுநிலைப்பள்ளி மாணவி மஹ்மூதா மஜ்மி இரண்டாம் பரிசும், அஸ்வினி பாலா,  சிவசைலநாதர் நடுநிலைப்பள்ளி மாணவி பாலஹரினி ஆகியோர் மூன்றாம் பரிசும் பெற்றனர். ஓவியப் போட்டியில் வாசுதேவநல்லூர் தங்கப்பழம் பள்ளி மாணவி செரின் முதல் பரிசும், புனிதமிக்கேல் பெண்கள் பள்ளி மாணவி கலைமதி இரண்டாம் பரிசும், பி.வி.எம். மேல்நிலைப்பள்ளி மாணவர் சுந்தர் ராஜன் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

பேச்சுப்போட்டியில் பராசக்தி வித்யாலயா பள்ளி மாணவி நிவ்யா முதல் பரிசும்,  சிவசைலநாதர் நடுநிலைப்பள்ளி மாணவி பாலமுகனா இரண்டாம் பரிசும், அச்சன்புதூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவி ஆசிகா மூன்றாம் பரிசும் பெற்றனர். கவிதைப் போட்டியில் கல்வியியல் கல்லூரி மாணவி மேக்டலின் பிரபா முதல் பரிசு பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்