தண்டராம்பட்டு அருகே காஸ் சிலிண்டர் வெடித்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த நவம்பட்டு அருகே உள்ள இருதயபுரம் கிராமத்தில் வசிப்பவர் லியோ பிலிப்ஸ்(25). இவரது வீட்டில் உள்ள காஸ் சிலிண்டர் நேற்று முன் தினம் நள்ளிரவு திடீரென வெடித்துள்ளது. இதனால் அவரது வீட்டின் சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்தது.
அப்போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த லியோ பிலிப்ஸ், அவரது சகோதரர் அலெக்ஸாண்டர், உறவினர் ஜான் போஸ்கோ ஆகிய 3 பேர் படுகாய மடைந்தனர். அவர்கள் மூவரும், தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தச்சம்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago