திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுகவின் 50-வது ஆண்டு பொன்விழா திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மூத்த நிர்வாகிகளை கவுர வித்தார்.
பின்னர் அவர் பேசும்போது, “பொன்விழா காணும் அதிமுக வின் நல்லாட்சி தமிழகத்தில் மீண்டும் மலர்ந்திட அனைவரும் சூளுரை ஏற்போம்” என்றார்.
இதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை நகரம், திருவண்ணாமலை ஒன்றியம், துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அதிமுக கொடியை ஏற்றி வைத்து அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இனிப்பு வழங்கினார்.
இதில், மாவட்ட அவைத் தலைவர் நாராயணன், மாவட்டப் பொருளாளர் நைனாகண்ணு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago