ராமநாதபுரத்தில் காவல்துறை மரியாதையுடன் - 21 குண்டுகள் முழங்க மோப்ப நாய் உடல் அடக்கம் :

ராமநாதபுரத்தில் மூப்பின் காரணமாக இறந்த டயானா என்ற மோப்ப நாய் காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறையில் குற்ற செயல்களில் துப்பறிவதற்காக ஜூலி, ரோமியோ, லைக்கா ஆகிய நாய்களும், வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் திறன், மோப்ப சக்தி கொண்ட ராம்போ, ஜான்சி ஆகிய நாய்களும் பணியாற்றி வருகின்றன.

கடந்த 5 ஆண்டுகளாக வெடிகுண்டு தடுப்புப் பிரிவில் பணியில் ஈடுபட்ட லேபரடார் வகை டயானா என்ற நாய் நேற்று முன்தினம் மாலை வயதுமூப்பின் காரணமாக இறந்தது. இந்த நாய் தனது மோப்பத்திறனால் மாவட்டத்தில் பல கொலை, கொள்ளைச் சம்பவங்களில் சிறப்பாகத் துப்பறிந்துள்ளது. இந்நிலையில், மரணமடைந்த நாய் டயானாவின் உடல் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு வளாகத்தில் வைக்கப்பட்டு, போலீஸார் மாலை அணிவித்து 21 குண்டுகள் முழங்கஇறுதி மரியாதைக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE