திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், குடிமக்கள் நுகர்வோர் மன்றம், அடியக்கமங்கலம் கிளை அஞ்சலகம் ஆகியவற்றின் சார்பில் தேசிய அஞ்சல் வார விழா நேற்று கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அஞ்சல் அலுவலர் வெங்கடேசன் தலைமை வகித்து பேசியபோது, அஞ்சல் துறையின் காப்பீட்டுத் திட்டங்கள், செல்வமகள் சேமிப்புத் திட்டம், நிரந்தர வைப்பு திட்டம் ஆகியவற்றின் பலன்கள் குறித்து விவரித்தார்.
தொடர்ந்து, அஞ்சல் பை கட்டாளர் சசிகலா பேசியபோது, பொருட்களைக் கொண்டு சேர்ப்பதில் மிகக் குறைந்த கட்டணத்தில் அஞ்சல் துறையின் சேவைகள் குறித்து விளக்கினார். அஞ்சல்காரர் பவானி பேசியபோது, ஒப்புகையுடன் கூடிய நம்பிக்கையை அஞ்சல் துறை பெற்றுள்ளதை விளக்கினார். பின்னர், அஞ்சல் நிலைய ஊழியர்களுக்கு குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் தமிழ் காவலன் நினைவு பரிசுகளை வழங்கினார். முன்னதாக, நுகர்வோர் மன்ற மாணவர் செயலர் பிரவீன் வரவேற்றார். முடிவில், மாணவர் தீபன்ராஜ் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago