திருவண்ணாமலை அருகே - நீர்வரத்து கால்வாய்களை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு :

தி.மலை அருகே உள்ள வேங்கிக்கால் ஏரி, சேரியந்தல் ஏரி, நொச்சிமலை ஏரி மற்றும் கீழ்நாத்தூர் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின. நான்கு ஏரிகளில் இருந்தும் உபரி நீர் வெளியேறுகிறது.

இந்நிலையில், ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் நீர்வரத்துக் கால்வாய்களில் ஆக்கிரமிப்பு மற்றும் அடைப்புகள் காரணமாககுடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இதையடுத்து, நீர்வரத்துக் கால்வாய்களை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித் துறை மற்றும் உள்ளாட்சித் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணியை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். வேங்கிக்கால் ஏரி, வேலூர் சாலையில் உள்ள நீர்வரத்துக் கால்வாய், கீழ்நாத்தூர் ஏரியின் பாசனக் கால்வாய், சென்னை நெடுஞ்சாலை, நொச்சிமலை ஏரி மற்றும் கீழ்நாத்தூர் ஏரியின் நீர்வரத்துக் கால்வாய்களை ஆய்வு செய்தார். அப்போது அவர், நீர்வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் அடைப்புகளை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அப்போது, ஆட்சியர் முருகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்