கேரள மாநிலத்துக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் 5 குழுவினர் விரைந்துள்ளனர்.
கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் மிக கன மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பத்தினம்திட்டா, ஆலப் புழா, பாலக்காடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்புப் பணிக்காக அரக்கோணத்தில் இருந்து 4-வது தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எப்) பிரிவைச் சேர்ந்த 5 குழுவினர் நேற்று கேரள மாநிலத்துக்கு விரைந்துள்ளனர். ஏற்கெனவே, 6 குழுவினர் கேரள மாநிலத்தில் முகாமிட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக சென்ற 5 குழுவினர் வெள்ள மீட்பு சாதனங்கள், தேடுதல் பணிக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் நவீன கருவிகளுடன் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago