திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள பாத்திரத் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் சிஐடியு பாத்திரத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
அனுப்பர்பாளையம் வட்டாரத்தில் பணியாற்றும் பாத்திர பட்டறை தொழிலாளர்களுக்கு கடந்தாண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் தொகையை முன்கூட்டியே வழங்க வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டுக்கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. பாத்திர தயாரிப்புக்கு தேவைப்படும் தகடு, சோப்பு, மாப்பு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், பாத்திரத் தொழிலும், தொழிலாளர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பொருட்களின் விலையைக் குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிஐடியு திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் பி. முத்துசாமி, பாத்திர சங்க செயலாளர் கே.குப்புசாமி, பொருளாளர் குபேந்திரன் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago