கிருஷ்ணகிரி மாவட்டத்தில்எந்த இடத்தில் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றாலும், அனைத்து அலுவலர்களும் சமூக அக்கறையுடன், அதனை தடுக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஸ்குமார், வடிவமைத்த குழந்தைத் திருமண தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகையை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டார். அதில், குழந்தைத்திருமணம் நடப்பதற்கான காரணங்கள், அதனால் ஏற்படும் சிறுமி தாய் தற்கொலை, குழந்தை பள்ளி இடைநிற்றல், ஊட்டச்சத்து குறைபாடு, இளம் விதவை, குழந்தைக்கு பிறவி குறைபாடுகள், புற்று நோய், கொத்தடிமை மற்றும் மன அழுத்தம் ஆகிய விளைவுகள் ஏற்படுவதையும்,தடுக்கும் வகையில் குழந்தைத் திருமணத் தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
ஆட்சியர் கூறும்போது, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் குழந்தைத் திருமணங்கள் தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து துறை அலுவலர் களும் எதிர்கால சந்ததியை பாதுகாக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த இடத்தில் குழந்தைத் திருமணம் நடைபெற்றாலும் சமூக அக்கறையுடன் அதனைத் தடுக்க வேண்டும். குழந்தை திருமணத்தால் பள்ளி இடைநிற்றல், குழந்தைக்கு பிறவி குறைபாடுகள், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகிறது என்றார்.
இந்நிகழ்வில் நலப்பணிகள் இணை இயக்குநர் பரமசிவன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன், குழந்தைகள் பாதுகாப்பு அலகு மாவட்ட திட்ட அலுவலர் சரவணன், உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ராஜேஸ்குமார், வாசுகி, திலக் உட்பட மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago