தமிழகத்தில் கரோனா காரண மாகவார இறுதி நாட்களான வெள்ளி,சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலுக்கு செல்ல அனுமதிமறுக்கப்பட்டது. இதனால் வாரஇறுதி நாட்களில் கோயில்கள் பூட்டப்பட்டிருந்தன. தற்போது கரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து அரசு வாரத்தில் 7 நாட்களும் கோயிலுக்குச் செல்லலாம் என்று அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் காலை6 மணிக்கே கோயில்கள் திறக்கப்பட்டன. பக்தர்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சென்றுவழிபட்டனர். முகக்கவசம்அணிந்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.கோயில்களில் கிருமிநாசினியும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago