வரஞ்சரம் காவல் நிலையத்தில் பணிச்சுமை காரணமாக - பெண் காவலர் விஷமருந்தி தற்கொலை முயற்சி :

By செய்திப்பிரிவு

வரஞ்சரம் காவல் நிலைய பெண் காவலர் பணிச்சுமை காரணமா நேற்று விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் தீபா, வெளிப் பணிகளுக்காக கடந்த 7 மாதங்களாக வரஞ்சரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்தில் இருந்து தீபாவிற்கு போன் செய்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு பணிக்குவருமாறு கடந்த 4 நாட்களாக அழைக்கப்பட்டதாக கூறப்படுகி றது.அதேநேரத்தில் வரஞ்சரம் காவல் நிலைய அதிகாரிகள், நீதிமன்றப் பணியில் ஈடுபடுமாறு வலியுறுத்தி வந்துள்ளனர்.

இரு காவல் நிலைய போலீ ஸார் மாற்றி மாற்றி பணிகளுக்கு அழைக்கப்பட்டதால், மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந் தார்.

இந்நிலையில், கள்ளக் குறிச்சி மகளிர் காவல் நிலைத்தில் பணிக்கு வரவில்லை எனஒலி வாங்கி மூலம் தெரிவிக் கப்பட்டதாக கூறப்படுகிறது இதனால் மனமுடைந்த தீபா,நேற்று வரஞ்சரம் காவல் நிலை யத்திற்கு பணிக்கு சென்றிருந்த நிலையில், விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த சக போலீஸார் அவரை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்