விஜயதசமியை முன்னிட்டு - மதுரை கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி :

By செய்திப்பிரிவு

மதுரையில் உள்ள கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. அரிசியில் ‘அ’ எழுதி குழந்தைகள் கல்வியை தொடங்கினர்.

ஆயுத பூஜைக்கு அடுத்த நாளான விஜயதசமி தினத்தில் குழந்தைகள் அரிசி மற்றும் நெல்மணியில் ‘அ’ எழுதி கல்வியை தொடங்குவது தொன்றுதொட்டு வரும் வழக்கம். நேற்று விஜயதசமியை முன்னிட்டு மதுரையில் உள்ள நர்சரி, தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டினர்.

முன்னதாக கோயில்களில் பெற்றோர் தங்களின் குழந்தைகளின் கையை பிடித்து நெல் அல்லது அரிசியில் தமிழில் முதல் எழுத்தான ‘அ ’வை எழுத வைத்தனர். இம்மையில் நன்மை தருவார் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து பெற்றோர் மடியில் அமர்ந்து குழந்தைகள் அரிசியில் ‘அ’ எழுதி தங்களின் கல்வியை தொடங்கினர். ஏற்பாடுகளை தர்மராஜ் பட்டர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

கோயில்கள் மட்டுமின்றி பல்வேறு பள்ளிகளிலும் வித்யாரம் பம் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு ஆசிரியர்கள் குழந்தைகளின் கை பிடித்து ‘அ’ எழுத வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்