ஆந்திரா மாநில எல்லையோரம் பெய்யும் தொடர் மழையால், மாநில எல்லையில் கட்டியுள்ள தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிந்தோடுவதால், வேப்பனப்பள்ளி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியில் கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லைகளை கொண்டுள்ளது. வேப்பனப்பள்ளி அருகே மார்கண்டேயன் நதிக்கு, கர்நாடகா, ஆந்திரா மாநில மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் வரும். கர்நாடகா அரசு யார்கோள் அணையும், ஆந்திரா அரசு சிறிய தடுப்பணைகளும் கட்டியுள்ளதால், மார்கண்டேயன் நதிக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றது.
இந்நிலையில், ஆந்திரா மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்த தொடர் மழையால், அங்கு கட்டியுள்ள தடுப்பணை நிரம்பி, ஓ.என்.கொத்தூர் வழியாக வேப்பனப்பள்ளி பகுதிக்கு தண்ணீர் வந்துள்ளது. இதனால் இப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, வறண்டு கிடக்கும் இப்பகுதி களில் நீண்ட காலங்களுக்கு பிறகு ஆந்திர ஏரிக்கு வரும் இந்நீரின் ஒருபகுதியானது ஓடை வழியாக மாரச்சந்திரம் தடுப்பணைக்கு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் தண்ணீர் வருகிறது. மேலும், தென்பெண்ணையாற்றை மாரச்சந்திரம் தடுப்பணையுடன் இணைக்கும் திட்டத்தையும் விரைந்து செயல்படுத்தினால் இப் பகுதியிலுள்ள, 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பயன்பெறும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago