தூத்துக்குடியில் பிரதமர் மோடிஉருவ பொம்மையை எரிக்க முயன்ற 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
`உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலைக்கு காரணமான மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்க வேண்டும். 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும்’ என வலியுறுத்தி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடப்பதாக, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டது.
முன்னணி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், தூத்துக்குடி தபால் தந்தி அலுவலகம் முன்பு நேற்று காலை உருவபொம்மையை எரிக்க முயன்றபோது போலீஸார் தடுத்து நிறுத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் நல்லையா, மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஏடிஎஸ்பி கார்த்திகேயன், டிஎஸ்பி கணேஷ், மத்திய பாகம் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago