சுந்தரம்பள்ளி ஊராட்சியில் - மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

சுந்தரம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட சுந்தரம் பள்ளி ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக பிரமுகர் விஜயலட்சுமி(45). என்பவர் போட்டியிட்டார். கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில், திமுக பிரமுகர் விஜயலட்சுமி 1,269 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட 176 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்து அதற்கான சான்றிதழை அவரிடம் வழங்கினர்.

இந்நிலையில், விஜய லட்சுமியை எதிர்த்து போட்டியிட்ட அருள்செல்வி என்பவர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 1,093 வாக்குகள் பெற்று தோல்வி யடைந்தார்.

இந்நிலையில், தேர்தலில் தோல்வியடைந்த அருள்செல்வி நூற்றுக்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் திருப்பத் தூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்துக்கு நேற்று காலை வந்தார்.

ஆட்சியரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளிக்க உள்ளதாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் தெரிவித்தார். ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்தில் இருப்பதாக கூறி யதைத்தொடர்ந்து, ஆட்சியர் அலு வலகம் முன்பாக அருள்செல்வி ஆதரவாளர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், சுந்தரம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பதிவிக்கான வாக்கு எண்ணிக்கையில் முறை கேடு நடந்துள்ளதாகவும், வேட்பாளர்கள் அனைவர் முன்னி லையிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற வில்லை. இதனால், அங்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் திருப்பத்தூர் நகர காவல் துறையினர் அங்கு வந்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனையடுத்து, அருள்செல்வி தரப்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதன்பிறகு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்ப வத்தால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்