முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வாக்களித்த - புள்ளானேரி ஊராட்சியில் திமுக வேட்பாளர்கள் வெற்றி :

By செய்திப்பிரிவு

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வாக்களித்த ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, ஜோலார்பேட்டை ஒன்றி யத்துக்கு உட்பட்ட புள்ளானேரி ஊராட்சியில் கிராம ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 4 விதமான வாக்கினை கடந்த 6-ம் தேதி பதிவு செய்தார்.

இந்நிலையில், ஜோலார் பேட்டை ஒன்றியத்துக்கான கிராம ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான வெற்றி வேட்பாளர்களின் இறுதி பட்டியல் நேற்று வெளியானது.

இதில், புள்ளானேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக பிரமுகர் சங்கர் என்பவர் 206 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதேநேரத்தில், புள்ளானேரி 15-வது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சத்யா, அதிமுக வேட்பாளரைவிட 820 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மேலும், மாவட்ட கவுன்சிலர் பதவியிலும் திமுக வேட்பாளரே வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்