சாய உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு நன்றி :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்ட சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பி.காந்திராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

திருப்பூரிலுள்ள சாய ஆலைகள் பூஜ்ய நிலை சுத்திகரிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாத்து வந்தாலும், அவை செயல்படுவதற்கான ஆணையை ஆண்டு தோறும் புதுப்பிக்கவேண்டியுள்ளது. இதுதொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டிருந்த சுற்றறிக்கையின் அடிப்படையில், ஆணை புதுப்பித்தலை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசிடம்,திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.அதன்படி,எங்களது வேண்டுகோளை ஏற்று,தகுதியான நிறுவனங்களுக்கு, 5 ஆண்டுகளுக்கான புதுப்பித்தல் கட்டணத்தை மொத்தமாக கட்டும் பட்சத்தில், ஆணையை5 ஆண்டுகளுக்கு புதுப்பித்துத்தர தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு சாய உரிமையாளர்கள் சங்கம்சார்பில் நன்றி. இதற்காக பரிந்துரை செய்த சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ் ஆகியோருக்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நடவடிக்கை, தொழில்துறை மீது அரசு கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது.தமிழகத்தில் தொழில்துறை மேலும் வளர்ச்சி அடைய இது உதவும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்