மகளிர் தொழில்முனைவோருக்கு ரூ.40 லட்சம் கடனுதவி :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் ஊரக தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் ஆகிய நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 வட்டாரங்களில் 35 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலமாக உற்பத்தியாளர் மற்றும் தொழில் குழுக்கள், சமுதாயத் திறன் பள்ளிகள் மற்றும் சமுதாயப் பண்ணைப் பள்ளிகள் தொடங்க கலந்தாய்வுக் கூட்டம் உதகையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிராம வறுமைஒழிப்புச் சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலமாக 63 சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த மகளிர் தொழில்முனைவோருக்கு ரூ.40 லட்சம் மதிப்புள்ள கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார். இக்கூட்டத்தில் அதிக வருமானம் தரும் தொழில்களில் அனுபவம் வாய்ந்த நபர்களைக் கொண்டு தொழில் குழுக்கள் அமைக்கவும், அவர்களுக்குத் தேவையான சமுதாயத் திறன் பள்ளிகள் மற்றும்சமுதாயப் பண்ணைப் பள்ளிகள் சார்ந்த பயிற்சிகளை அளித்து வாழ்வாதார ஏற்றம் பெறவும், நீடித்த,நிலைத்த வருமானம் பெறுவதற்கான வழிவகைகள் குறித்தும் அனைத்து துறை அதிகாரிகளுடன், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்ட மாவட்டச் செயல் அலுவலர் மணிகண்டன் கலந்தாய்வு நடத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்