திருவள்ளூர் மாவட்ட இடைத்தேர்தலில் - 4 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக-3, அதிமுக-1 இடங்களில் வெற்றி :

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான இடைத்தேர்தலில் 3 இடங்களை திமுகவும், ஓர் இடத்தை அதிமுகவும் கைப்பற்றின.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற ஊரக உள்ளாட்சியின் 25 பதவிகளுக்கான இடைத்தேர்தலில், 4 ஒன்றிய கவுன்சிலர், 4 ஊராட்சி தலைவர், 17 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 93 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்றது.

வாக்குகள் எண்ணிக்கை முடிவில், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தின் 15-வது வார்டு கவுன்சிலர் பதவியை திமுக வேட்பாளர் ருக்மணி 1,516 வாக்குகள் பெற்றும், 18-வது வார்டு கவுன்சிலர் பதவியை திமுக வேட்பாளர் மாலதி 1,894 வாக்குகள் பெற்றும், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தின் 1-வது வார்டு கவுன்சிலர் பதவியை திமுக வேட்பாளர் அம்மு 2,389 வாக்குகள் பெற்றும் கைப்பற்றினர்.

அதேபோல், பூண்டி ஊராட்சி ஒன்றியத்தின் 3-வது வார்டு கவுன்சிலர் பதவியை 1,862 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் காயத்ரி கைப்பற்றினார்.

அதுமட்டுமல்லாமல், ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம்- தாமனேரி ஊராட்சி தலைவராக கிரி, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம்- ஆலாடு ஊராட்சி தலைவராக பிரசாத், திருவெள்ளவாயல் ஊராட்சி தலைவராக முத்து, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம்- கொசவன்பாளையம் ஊராட்சி தலைவராக அண்ணாகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்