தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்று நள்ளிரவு வரை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இந்த மழை யின்போது நெல் கொள்முதல் நிலையத்தின் அருகே இருந்த சாலையோர தடுப்புசுவர் இடிந் ததில், நெல் மணிகள் சேதம டைந்தன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இடி, மின்னலுடன் தொடங் கிய மழை நள்ளிரவு வரை பெய் தது. இதனால், மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக் கோட்டை ஆகிய நகரங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
மேலும், அறுவடை செய்யப் படாமல் உள்ள குறுவை நெல் வயல்களில் மழைநீர் தேங்கியதால், நெற்கதிர்கள் வயல்களில் சாய்ந்து சேதமடைந்தன. அதே போல, அறுவடை செய்து விற்பனைக்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்கள் ஈரப்பதம் அதிகமாகி விற்பனை செய்ய முடியாமல் தேங்கியுள்ளன.
தஞ்சாவூர் அருகே கரந்தை பூக்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில் அருகே உள்ள நான்கடி உயரமுள்ள தடுப்புச் சுவர் 60 அடி நீளத்துக்கு மழையின் காரணமாக இடிந்து விழுந்ததில், அதனருகே கொட்டி வைக்கப் பட்டிருந்த நெல்மணிகள் இடிபாடு களுக்குள் சரிந்து சேதமானது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று காலை வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): தஞ்சாவூர் 86, மஞ்சளாறு 85, குருங்குளம் 71, கும்பகோணம் 68, வல்லம் 67, திருவிடைமருதூர் 61, பாபநாசம் 57, ஈச்சன்விடுதி 55, அணைக்கரை 53, திருவையாறு 50.
தற்போது பெய்து வரும் தொடர்மழை நடவு செய்யப்பட் டுள்ள சம்பா சாகுபடியின் இளம் நெற்பயிருக்கு பாதிப்பை ஏற்ப டுத்தும் என்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago