ஊரக உள்ளாட்சி தேர்தலில் - வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் திமுக முன்னிலை : காட்பாடியில் தேர்தல் அலுவலரிடம் அதிமுகவினர் வாக்குவாதம்

By செய்திப்பிரிவு

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 14 மையங்களில் நடை பெற்ற வாக்கு எண்ணிக்கையில் மாவட்ட ஊராட்சி மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களில் திமுக முன்னிலை பிடித்தது.

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இரண்டு கட்டங் களாக 4,312 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், போட்டியிட்ட 12,631 வேட் பாளர்களின் வாக்குகள் எண்ணும் பணி 14 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில், வேலூர் மாவட்டத்தில் 14 மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட 2,151 பதவிகளுக்கு 6,547 பேர் போட்டியிட்டனர். இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு சராசரி 79.35% ஆகும். அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட 2,161 பதவிகளுக்கு நடைபெற்ற இரண்டு கட்ட தேர்தலில் 6,084 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சராசரி வாக்குப்பதிவு 81.7% ஆகும்.

14 மையங்கள்

வேலூர் மாவட்டத்தில் வேலூர் ஒன்றியத்துக்கு தந்தை பெரியார் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, காட்பாடிக்கு வேலூர் சட்டக்கல்லூரி, கணியம்பாடிக்கு கணாதிபதி துளசிஸ் பொறியியல் கல்லூரி, அணைக்கட்டுக்கு இறைவன்காடு  அன்னை பாலிடெக்னிக் கல்லூரி, குடியாத்தத்துக்கு கே.எம்.ஜி கலை கல்லூரி, கே.வி.குப்பம் ஒன்றியத்துக்கு சென்னங்குப்பம் வித்யாலட்சுமி மெட்ரிக் பள்ளி, பேரணாம்பட்டுக்கு மரித் ஹாஜி இஸ்மாயில் சாஹிப் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், திமிரி ஒன்றியத்துக்கு கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரி, ஆற்காடு ஜி.வி.சி கல்லூரி, ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி, அரக்கோணம்  கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, காவேரிப் பாக்கம்  சப்தகிரி பொறியியல் கல்லூரி, பனப்பாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சோளிங்கர் எத்திராஜம்மாள் முதலியாண்டாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

வாக்கு எண்ணும் மையங் களில் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையின் ‘சீல்’ உடைக்கப்பட்டு கிராம ஊராட்சிகள் வாரியாக வாக்குப்பெட்டிகள் பிரிக் கப்பட்டன. ஒவ்வொரு வாக்குப்பெட்டியில் உள்ள 4 வண்ண வாக்குச்சீட்டுக்கள் வகைப் படுத்தப்பட்டு வாக்குகள் எண் ணும் பணி தொடங்கியது.

வேலூர் தந்தை பெரியார் அரசினர் ஈ.வெ.ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் நடை பெற்ற வாக்கு எண்ணும் பணியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

அதேபோல், ராணிப் பேட்டை பொறியியல் கல்லூரி யில் நடைபெற்ற வாக்கு எண்ணும் பணியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 2 மாவட்ட ஊராட்சி மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி திமுக முன்னிலையில் இருந்தது.

மஞ்சள் துண்டு

காட்பாடி வாக்கு எண்ணும் மையத்தில் திமுக பிரமுகர்கள் மஞ்சள் துண்டு அணிந்து வந்திருந்தனர். இதுகுறித்து அதிமுகவினர் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்வேலிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், கட்சி சின்னம் அணிந்த துண்டுகள் இருந்தால் மட்டும் அனுமதி இல்லை என்பதால் இதற்கெல்லாம் தடை விதிக்க முடியாது என கூறிவிட்டார்.

அதேபோல், வாக்குப் பெட்டி வைக்கப்பட்ட கோணிப்பைகளுக்கு ஏன் ‘சீல்’ வைக்கவில்லை என கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பெட்டிகள் வைத்த வெள்ளை துணிக்கு மட்டும் ‘சீல்’ வைக்கப்படும், கோணிப்பை களுக்கு இல்லை என்று கூறினர். இந்த வாக்குவாதத்தால் சுமார் 30 நிமிடங்கள் கால தாமதமாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

குடியாத்தம்

குடியாத்தம் ஒன்றிய வாக்கு கள் எண்ணும் பணி கே.எம்.ஜி கல்லூரியில் நடைபெற்றது. வாக்குப்பதிவு விவரங்களை தெரிந்துகொள்வதற்காக ஏராளமான தொண்டர்கள் கல்லூரி முன்பாக திரண்டதால் குடியாத் தம்-வேலூர் சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதை யடுத்து, காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கூட் டத்தை கலைத்து போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்தினர்.

அரக்கோணம்

அரக்கோணம் மற்றும் சோளிங்கர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர் களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியை தொடங்காமல் புறக்கணித்தனர். இதற்கிடையில், தாமதமாக வந்த உணவு பொட்டலங்கள் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. தனியார் உணவக வாகனத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் காலதாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்