மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளை முற்றுகையிட்டு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
திருப்பத்துார் அடுத்த சின்ன கந்திலியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், கந்திலி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் கந்திலி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அவர் போட்டியிட்டார்.
கெஜல்நாயக்கன்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் துரைசாமியைவிட, அதிமுக வேட்பாளர் மணிகண்டன் 119 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக வாக்கு எண்ணும் மைய அதிகாரிகள் அறிவித்தனர்.
அப்போது, அங்கிருந்த திமுகவினர் சிலர் அதிகாரிகளை முற்றுகையிட்டு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும், என வலியுறுத்து கூச்சலிட்டனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
அதிகாரிகளிடம் வாக்குவாதம்
இதனால், மணிகண்டன் வெற்றி பெற்ற தற்கான சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்த பிறகும், அதற்கான சான்றிதழை உடனே வழங்காததை கண்டித்து அதிமுகவினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, மணிகண்டன் 119 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவித்து அதற்கான சான்றிதழை வழங்கினர்.
அதேபோல, கந்திலி ஒன்றியம் நரியநேரி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக போட்டியிட்ட சிவகாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை காட்டிலும் சுமார், 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago