கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த நாதஸ்வரம், தவில், இசைக் கலைஞர்கள் சார்பில், சரஸ்வதி துணை நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக் கலைஞர்கள் நலச்சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், ‘கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கரோனா பாதிப்பால் கோயில் திருவிழா, திருமணம், சீர் மற்றும் காதணிவிழா அனைத்து நிகழ்ச்சிகளும் தடைபட்டதால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இசைக்கருவிகள் வழங்கவும், மூத்த இசைக்கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும். கோவை, திருப்பூர் நாதஸ்வரம், தவில் இசைக் கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்க வேண்டும். அரசு விழாக்களில் எங்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். இலவச வீடு, வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். சங்கத்துக்கு கட்டிடம் கட்டித்தர வேண்டும்,’ என குறிப்பிட்டுள்ளனர்.முன்னதாக ஆட்சியர் அலுவலகம் முன்பு வாத்தியங்களை முழங்கி, மங்கல இசை இசைத்து தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago