ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம் :

By செய்திப்பிரிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் தேனி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் பொன்.அமைதி தலைமை வகித்தார். செயலாளர் சேதுராம், பொருளாளர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்புத் தலைவர்கள் எம்.பன்னீர்செல்வம், எஸ்.அழகர்சாமி ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.

மாநிலம் முழுவதும் ஒரே சீரான ஊதியம் பெறுவதற்கு ஏதுவாக மாதிரி ஊதிய நிர்ணய பட்டியல் வெளியிட வேண்டும். கரோனா தொற்று பரவி வருவதால் கைவிரல் ரேகை பதிவுக்குப் பதிலாக விழித்திரை அடையாளத்தை சரிபார்த்து பொருட்களை விநியோகிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் விடுப்பு எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத் துணைத் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மாயாண்டி முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் திருஞானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்