கிருஷ்ணகிரி நகராட்சியில் கால்வாயை தூர்வாரி முடித்த பகுதிகளில் மீண்டும் கால்வாய் மீது கல்லை போட்டு கடைகள் வைத்திருந்தால் உடனே அகற்ற வேண்டும் என ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி நகராட்சியில் கடந்த மாதம் முதல் மழை நீர் வடிகால் கால்வாயை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. ஜேசிபி இயந்திரம் மூலம் இதுவரை 60 கி.மீ., தொலைவுக்கு கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளது. கால்வாயை தூர்வாரி முடித்த பகுதிகளில் மீண்டும் கால்வாய் மீது கல்லை அமைத்து பலர் ஆக்கிரமித்துள்ளதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து கிருஷ்ணகிரி டி.பி., சாலையில் நகராட்சி ஆணையர் முருகேசன் ஆய்வு மேற்கொண்டார். அதில், பலர் கால்வாய் மீது கல்லைப் போட்டு கடைகள் வைத்திருந்ததால், அவற்றை உடனே அகற்றி மழை நீர் செல்ல வழி விட வேண்டும் என அவர்களிடம் எச்சரிக்கை விடுத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago