ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கக் கோரி மனு :

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார். பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 546 மனுக்கள் வரப் பெற்றன.

வேங்கூர் கிராமத்தினர் அளித்த மனுவில், ‘‘எங்கள் கிராமத்தில் 2006 வரை ஜல்லிக்கட்டு நடத்தி வந்தோம். பின்னர், பல்வேறு காரணங்களால் நடத்த இயலவில்லை. இந்தநிலையில், அடுத்த ஆண்டு சித்திரை மாதம் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்திய பார்வையற்றோர் மேம்பாட் டுக் கழகத்தினர் அளித்த மனுவில், “பார்வையற்றோருக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.1,000-லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களில் பெட்டிக்கடை நடத்த விண்ணப்பிக்கும்போது உடனடியாக அனுமதி வழங்க வேண் டும். பார்வையற்றோரை வேலைக்கு அமர்த்தும் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத் தொகை, வரிச் சலுகை வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

தமிழ்நாடு பழங்குடியினர் மலை யாளி(எஸ்டி) நல அமைப்பினர் அளித்த மனுவில், “நாமக்கல் மாவட் டம் கொல்லிமலை குண்டுனிநாடு கிராமம், அடுக்கம் புதுக்கோம்பை மலை அடிவாரத்தில் கருப்பு சிவன் கோயில் உள்ளது. துறையூர் வட்டம் தளுகை கிராமத்தைச் சேர்ந்த பாதர் பேட்டை கிராமத்தில் இருந்து கொல்லி மலைக்கும், அடுக்கம் புதுக்கோம்பை மலை அடிவார கருப்பு சிவன் கோயிலுக் கும் செல்ல பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை அமைத்துத் தர வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்