மாதந்தோறும் 1-ம் தேதி ஊதியம் வழங்க வேண்டும் : ரேஷன் ஊழியர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மாதந்தோறும் 1-ம் தேதி ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் வலியுறுத் தியுள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று அந்தச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பா.ரமேஷ் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், ரேஷன் கடை பணியாளர்களுக்கு அனைத்து நிதிப் பயன்களையும் வங்கி மூலம் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு மற்றும் மாநிலம் முழுவதும் சீரான ஊதியம் பெறுவதற்கு ஏதுவாக மாதிரி ஊதிய நிர்ணய பட்டியல் வெளியிட வேண்டும். மாதந்தோறும் 1-ம் தேதி ஊதியம் வழங்க வேண்டும் .

கரோனாவால் உயிரிழந்த பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். பயோமெட்ரிக் முறைக்குப் பதிலாக கண் விழித்திரை மூலம் விற்பனை செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள 3,500 விற்பனையாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ரேஷன் கடைகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.அண்ணாதுரை, மாவட்டப் பொருளாளர் ஜி.பிச்சைப்பிள்ளை, மாநகரப் பொருளாளர் ஜி.சூரி, மாவட்ட துணைத் தலைவர் சி.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.

மாவட்டத் தலைவர் தமிழ்செழியன் முன்னிலை வகித்தார். வருவாய்த் துறை மாநிலத் தலைவர் பி.கே.சிவக்குமார் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார்.

கரோனாவால் உயிரிழந்த பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்