டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற - திருச்சி வீராங்கனைகளுக்கு மின்வாரியத்தில் பணி : முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமன ஆணைகளை வழங்கினார்

By செய்திப்பிரிவு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங் கேற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சுபா, தனலட்சுமி ஆகிய இரு வீராங்கனைகளை தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலராக நியமித்து முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை நேற்று வழங்கினார்.

ஒலிம்பிக் மற்றும் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங் கேற்று பதக்கங்கள் வென்று பெருமை சேர்க்கும் வகையில், அவர்களுக்கு உலகத் தரத்திலான பயிற்சி வழங்குதல், விளையாட்டு உபகரணங்களை வழங்குதல், வெற்றி பெறும் வீரர்களுக்கு ஊக் கத் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் கிராமத்தைச் சேர்ந்த வெ.சுபா, குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.தனலட்சுமி ஆகியோர் கடந்த ஜூலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 4X400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்று பெருமை சேர்த்தனர்.

அவர்களை கவுரவப்படுத்தும் வகையில், இருவருக்கும் தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணி வழங்கப்பட் டுள்ளது. இதற்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்துக்கு பெருமை சேர்ப்போம்

இதுகுறித்து தடகள வீராங்கனை கள் சுபா, தனலட்சுமி ஆகியோர் கூறும்போது, ‘‘சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பங் கேற்று பல்வேறு வெற்றிகளை பெற்றிருந்தாலும்கூட, எங்களுக் கான தேவைகள், பயிற்சிக்கான இதர செலவுகளுக்குகூட மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. எனவே, அரசு சார்பில் பணி வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என ஒலிம்பிக்கில் பங்கேற்கச் செல்லும் முன் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதைத் தொடர்ந்து, எங்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான அறிவிப்பை ஒலிம்பிக்கில் பங்கேற் றுவிட்டு, நாடு திரும்புவதற்கு முன்பாகவே முதல்வர் மு.க.ஸ்டா லின் அறிவித்து மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். அதன்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலராக நியமிக் கப்பட்டுள்ளோம். இதற்கான ஆணையை வழங்கிய முதல்வர், ‘விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று தமிழகத் துக்குப் பெருமை சேர்க்க வேண்டும்' என வாழ்த்தினார்.

அரசு வேலை மட்டுமின்றி பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்கச் செல்வதற்காக அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் எனவும் அவர் உறுதி யளித்தார். அவரது வாழ்த்தும், பாராட்டும் எங்களுக்கு மேலும் ஊக்கமளித்துள்ளது. நிச்சயம் தொடர்ந்து பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்று தமிழக அரசுக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தும் பெருமை சேர்ப்போம். திருச்சி அலுவலகத்தில் பணியி டம் ஒதுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு வேலை கிடைத்ததில் குடும்பத் தினரும் மிகுந்த மகிழ்ச்சியடைந் துள்ளனர். தமிழக அரசின் இந்த செயல், இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்