தேசிய அளவிலான ஓவிய போட்டிக்கு தூத்துக்குடி பள்ளி மாணவி தேர்வு :

By செய்திப்பிரிவு

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி கழகம் ஆண்டுதோறும் தேசிய அளவிலான ஓவியம், கட்டுரை, விநா விடை போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு வெளிநாட்டு பயணம், மடிக்கணினி, கையடக்க கணினி, ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

மாணவர்களிடையே பெட்ரோலியப் பொருட்களைச் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2020-2021-ம் கல்வியாண்டில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் பங்கேற்ற தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளி மாணவி மாநில அளவில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

ஓவியப் போட்டியில் பத்தாம் வகுப்பு மாணவி ஏ.தேவியின் படைப்பும், கட்டுரைப் போட்டியில் பத்தாம் வகுப்பு மாணவி ஆர்.சிவானியின் படைப்பும் மாநில அளவிலான சிறந்த படைப்புகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் மாணவி ஏ.தேவி தேசிய அளவிலான ஓவியப்போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவியரை பள்ளி செயலாளர் இரா.முரளி கணேசன், இயக்குநர் லெட்சுமி பிரீத்தி, தலைமையாசிரியை சாந்தினி கவுசல் மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்