திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தில் மறு தேர்தல் நடத்த வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாமகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, பாமக மாநில துணைத்தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் கலந்து கொண்டனர்.
இதைதொடர்ந்து, ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிரிசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட தினேஷ் என்பவர், ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அம் மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பத்துார் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில், கடந்த 9-ம் தேதி நடத்த 2-ம் கட்ட தேர்தலில் ஆலங்காயம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள், ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருந் தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை திமுக எம்எல்ஏ தேவராஜி உட்பட சிலர் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அத்துமீறி நுழைந்து தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்குப்பெட்டியை மாற்றி வைத்து வாக்குப்பெட்டியில் இருந்த ‘சீல்’ உடைத்து அதிலிருந்த வாக்குச்சீட்டுகளை மாற்றி உள்ளது தெரியவந்துள்ளது.
எனவே, வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைந்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடு நடந்த வாக்கு மையத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்த வேண்டும். ஆலங்காயம் ஒன்றியத்தில் அனைத்து பகுதிகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும்’’. இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை
இதேபோல், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாமக மாநில துணை பொதுச் செயலாளர் சரவணன் அளித்துள்ள மனுவில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது.எனவே, வாக்குச்சீட்டு பெட்டிகளை மையங்களுக்கு எடுத்துச் செல்லும்போது வேட்பாளர் களின் முகவர்களையும் உடன் வருவதற்கு அனுமதிக்க வேண்டும். அனைத்து நிகழ்வுகளையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.
வாக்குகளை எண்ணி முடித்து உடனுக்குடன் முடிவுகளை அறிவிக்க வேண்டும்’ என மனுவில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago