ஆவடி அருகே ஆபத்தான முறையில் உள்ள - மின்கம்பங்களை அகற்ற : பொதுமக்கள் வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் இருந்து அம்பத்தூர் செல்லசென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலையை (சிடிஎச்) வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். பிரதான சாலை என்பதால், தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இச்சாலையில் செல்கின்றன. இதனால், எப்போதும் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இச்சாலையை ஒட்டி, தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் பயிற்சி மையம் உள்ளது. இதன் அருகில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இவற்றுக்கு இடையே சாலையின் மீது 3 மின்கம்பங்கள் உள்ளன.

சாலையின் ஓரமாக அமைப்பதற்கு பதிலாக சாலையின் மீதே அமைக்கப்பட்டுள்ளதால், அடிக்கடி இப்பகுதியில் விபத்துகள் நடைபெறுகின்றன. குறிப்பாக, இரவு நேரத்தில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன.

கடந்த 2018-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த மின்கம்பங்களை அகற்றக் கோரி பொதுமக்கள், வியாபாரிகள் சங்கம், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மின்வாரியம், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு பலமுறை மனுஅளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், அங்கு விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது.

உடனடி நடவடிக்கை

எனவே, ஆபத்தான இந்தமின்கம்பங்களை அகற்றி சாலைஓரத்தில் அமைக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட மின்வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்