கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, திருவள்ளூர் மாவட்டத்தில் 5-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதற்காக, மாவட்டம் முழுவதும் 1,000 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டன.
இத்தடுப்பூசி செலுத்தும் பணிக்காக மாவட்டம் முழுவதும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், முன்கள பணியாளர்கள் என 4 ஆயிரம் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், தடுப்பூசி செலுத்த தகுதி வாய்ந்த18.88 லட்சம் பேர் உள்ளனர்.இதில், 66 சதவீதம் பேர் முதல்தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 24 சதவீதம் பேர்2-ம் தவணை தடுப்பூசி செலுத்திஉள்ளனர். நேற்றைய தடுப்பூசி முகாமில் 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்து. கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்ற தடுப்பூசி முகாமை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.
திருவேற்காடு மற்றும் பூந்தமல்லி பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தொடங்கி வைத்து நேரில் ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago