கடலூர் மாவட்டத்தில் இன்னும் - 20.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும் :

By செய்திப்பிரிவு

மாவட்டத்தில் 15 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட் டுள்ளது. இன்னும் 20 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடவேண்டியுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதில் நெய்வேலி அருகே உள்ள கெங்கைகொண்டான் பேரூராட்சி அலு வலகம், கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிலையம், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட பாலக்கரை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது:

கடலூர் மாவட்டத்தில் ஐந்தா வது முறையாக நேற்று 909 முகாம்கள் அமைக்கப்பட்டு கரோனா தடுப்பூசி போடப் பட்டது. மாவட்டத்தில் தடுப்பூசிபோடப்பட்டவர்களின் எண் ணிக்கை அதிகரிப்பதனால் கரோனா பரவல் குறைந்து வரு கிறது. கடந்த மாதங்களை விட தற்போது கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இதற்கு காரணம் அதிகமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதேயாகும். மாவட்டத்தில் 15 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 20 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடவேண்டியுள்ளது.

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தண்ணீர் தேங்கா வண்ணம் கண்காணித்து வாரம் ஒருமுறை பேருராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். மாவட்ட மலேரியா அலுவலர் கெஜபதி,வட்டாட்சியர் சிவக்குமார் வட்டார மருத்துவ அலுவலர்கள் புலிகேசி,பாலச்சந்திரன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்