கண்மாய்க்கு வந்த நீரை தடுத்ததால் - சிவகங்கை அருகே கிராம மக்கள் மறியல் :

சிவகங்கை அருகே கண்மாய்க்கு வரும் தண்ணீரை வேறு பக்கம் திருப்பிவிட்டதைக் கண்டித்து கிராம மக்கள் மறியல் செய்தனர்.

சிவகங்கை அருகே முடிகண்டம் பெரிய கண்மாய் மூலம் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த வாரம் குமாரபட்டி கண்மாய் நிரம்பி முடிகண்டம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் சிலர் கரைகளை உடைத்து கண்மாய்க்கு வரும் தண்ணீரை வேறு பக்கம் திருப்பிவிட்டனர். இதையடுத்து கரைகளை உடைத்து தண்ணீரைத் திருப்பிவிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கரும்பாவூர் விலக்கு சிவகங்கை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி பால்பாண்டி, வட்டாட்சியர் தர்மலிங்கம் ஆகியோர் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்த மறியலால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE