தரமான விதை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட விதைச் சான்று உதவி இயக்குநர் ச.அசோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நான்கு நிலைகளில் விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முதல் நிலை ‘கருவிதை' வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண்மை கல்லூரிகளில் உற்பத்தி செய்யப்பட்டு, மஞ்சள் நிற சான்றட்டை பொருத்தப்படுகிறது. கருவிதைகளில் இருந்து ‘ஆதார நிலை -1' விதையும், அதில் இருந்து 'ஆதார நிலை -2' விதையும் உற்பத்தி செய்யப்பட்டு வெள்ளை நிறச் சான்றட்டை பொருத்தப்படுகிறது. அதிலிருந்து ‘சான்று பெற்ற விதைகள்' விவசாயிகள் அமைக்கும் விதைப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு, நீலநிறச் சான்றட்டை பொருத்தப்படுகிறது.

விவசாயிகள் அமைக்கும் விதைப் பண்ணைகளை விதைச் சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமும், நேரிலும் பதிவு செய்ய வேண்டும். இதற்கான பதிவுக் கட்டணம் பயிருக்கு ஏற்ப செலுத்த வேண்டும்.விதைச் சான்று அலுவலர் களால் விதைப்பண்ணைகள் ஆய்வு செய்யப்பட்டு விதைச் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்தம் செய்து ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தரமான விதைகள் உற்பத்தி செய்து சான்று வழங்க உரிய வழிவகை செய்யப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்