புதுக்கோட்டை மாவட்டம் வேப் பங்குடி ஊராட்சி தேத்தான்பட் டியில் குடிநீருக்கான ஆழ்துளை கிணறு அமைக்க நிதி ஒதுக்கியும் பணிகளை தொடங்காததைக் கண்டித்து, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 3-வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டோரி டம், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தொடங்கி னால் போராட்டத்தைக் கைவிடு வதாக தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், ஒன்றிய பொது நிதி ரூ.15.67 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை சுற்றுச்சூழல்-கால நிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் கவிதா ராமு, திருவரங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் வள் ளியம்மை தங்கமணி, ஊராட் சித் தலைவர் ஆர்.ராஜாங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர். ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டோர் அரசுக்கு நன்றி தெரிவித்து விட்டு கலைந்து சென்றனர்.
திமுகவை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தியதால், கூட்ட ணிக் கட்சிகளுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago