கரூர் மாவட்டத்தில் 73% பேருக்கு கரோனா முதல் தவணை தடுப்பூசி : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கரூர் மாவட்டத்தில் 73% பேருக்கு கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கரூர் நகராட்சி செல்லாண்டி பாளையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகளின் வீடுக ளுக்குச் சென்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது, நோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவம் அளிக்கப்படுவதை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு இரு மாதங்களுக்கான மருந்து, மாத்திரைகளை வழங்கினார். மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உடனிருந்தார்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் 64 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 22 சதவீதம் பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர். 70 சதவீதத்துக்கு மேலானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலே கரோனாவால் பெரிய பாதிப்பு இருக்காது. இன்றைக்கு 1,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பரிசோதனையில் இது 0.80 சதவீதமாகும்.

கரூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் 8,53,600 பேர். இதில் 6,22,921 பேர் என 73 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் சென்னைக்கு அடுத்த இடத்தில் கரூர் உள்ளது. 18 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கான தடுப்பூசி பரிசோதனையில் உள்ளது. பரீட்சார்த்த முறையில் செலுத் தும் பணி தொடங்கினால், அதை செயல்படுத்துவதில் தமி ழகம் முன்னணியில் இருக்கும். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 18,87,703 பேர் பயன டைந்துள்ளனர் என்றார்.

மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங் கர்,எம்எல்ஏக்கள் அரவக்குறிச்சி ஆர்.இளங்கோ, குளித்தலை மாணிக்கம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சந்தோஷ்குமார், கரூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, நகர்நல அலுவலர் லட்சியவர்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE