காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர்நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், பெரும்புதூர் ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலையொட்டி 600-க்கும் மேற்பட்ட போலீஸார்பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். அதிரடிப்படையினரும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தேர்தல் நடைபெறும் இடங்களில் நேரில் சென்றுஆய்வு செய்தார். குன்றத்தூர், பெரும்புதூர் வாக்குச் சாவடிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார். பதற்றமான பகுதிகளில் கூடுதல் கவனத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago