திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்தி, பருவகாலம் தொடங்குவதற்கு முன்பே,பதிவு செய்துள்ள அனைத்து விவசாயிகளிடமிருந்தும் அடுத்த 15 தினங்களுக்குள் முழுமையாக கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, வரும் 20-ம் தேதி வரைஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டுமென்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பைபயன்படுத்தி, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை தினங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அணுகிமுன்பதிவு செய்து, அறுவடை செய்யும் நெல்லை விற்றுப் பயனடையலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago