காளையார்கோவில் அருகே வேம் பனியில் 90 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்தும், ஒன்றியக் கவுன்சிலர் தேர்தலை நிறுத்த வலியுறுத்தியும் அதிமுக எம்எல்ஏ தலைமையிலான அக்கட்சியினர் மற்றும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியம் புலியடிதம்பம், மரக்காத்தூர், பள்ளிதம்பம் ஊராட்சிகளுக்குட்பட்ட 6-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நேற்று நடந்தது. திமுக சார்பில் கந்தசாமி, பாஜக சார்பில் அழகுராஜா, அமமுக சார்பில் சபரி உட்பட 5 போட்டியிடுகின்றனர்.
வாக்குப் பதிவின்போது வேம்பனி மையத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த 90 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் தலைமையிலான அக்கட்சியினர் மற்றும் பாஜக மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி தலைமையிலான அக்கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் முறை யிட்டு வாக்குப் பதிவை நிறுத் தக்கோரி போராட்டத்தில் ஈடு பட்டனர்.
அதையேற்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதைத் தொடர்ந்து மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும். இல்லாவிட்டால் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்ட 90 பேருக்கு வாக் காளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துவிட்டு சென்றனர்.
இதுகுறித்து செந்தில்நாதன் எம்எல்ஏ கூறியதாவது: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தோர் பெயர்களை நீக்கியுள்ளனர். அதேநேரம், இங்கு வசிக்காத 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் பெயர்களை இணைத்துள்ளனர். திமுகவின் சதியால் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்க வில்லை. தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago