தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்த சிவபெருமாள் (45) என்பவர் கொலை வழக்கில், திம்மையார் காலனியைச்சேர்ந்த மாடசாமி மகன்கள் ஆறுமுகம் (31), சொர்ணராஜ் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாளமுத்துநகர் நிர்மல்குமார் (38), வைகுண்டம் அண்ணாநகரைச் சேர்ந்த முத்துக்குமார் (42) ஆகியோர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் பரிந்துரையின்படி, இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago