அரியலூர் மாவட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் 14 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் டாஸ்மாக் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்தனர். இதில், கூடுதல் விலைக்கு மது விற்பது. மொத்த விற்பனை செய்தல், ரொக்க இருப்பு குறைவு போன்ற விதிமீறல்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, இதில் தொடர்புடைய, வாரியங்காவல் கடை மேற்பார்வையாளர் அ.பாலமுருகன், விற்பனையாளர் கே.சிவக்குமார், வரதராஜன்பேட்டை கடை மேற்பார்வையாளர் முருகன், விற்பனையாளர்கள் பி.செல்வகுமார், ரவீந்திரன், கே.பழனிவேல், ஆண்டிமடம் கடை மேற்பார்வையாளர் சி.பழனிவேல், விற்பனையாளர்கள் ஜி.சண்முகவேல், பி.பிறைச்செல்வன், அரியலூர்(எண் - 6301) கடை மேற்பார்வையாளர்கள் ஜி.ராஜகோபால், கே.சாமிநாதன், விற்பனையாளர்கள் எம்.கருணாநிதி, எஸ்.அக்பர்கான், வி.பாலசுப்ரமணியன் ஆகிய 14 பேர் நேற்று முன்தினம் முதல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் எம்.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதே குற்றச்சாட்டுகளின்பேரில் திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சக்திவேல் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago