தமிழக அரசைக் கண்டித்து - இந்து மக்கள் கட்சியினர் ஆலய நுழைவுப் போராட்டம் :

By செய்திப்பிரிவு

தமிழக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சியினர் ஆலய நுழைவு போராட்டம் நடத்தினர்.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்கள் சுவாமி தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. மற்ற நாட்களில் கரோனா விதிமுறைகளைக் கடைபிடித்து சுவாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

வாரத்தின் அனைத்து நாட்களும் தரிசனத்துக்கு அனுமதி கோரி, இந்து மக்கள் கட்சியினர் தூத்துக்குடி வைகுண்டபதி வரதராஜ பெருமாள் கோயில் முன்பு ஆலயம் நுழையும் போராட்டத்தை நேற்று நடத்தினர். கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளர் செல்வசுந்தர் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் வசந்த் குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோயில் வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்திய பின், அவர்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்