வேலூர் மாவட்டத்தில் இன்று 12 மையங்களில் யு.பி.எஸ்.சி தேர்வு :

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் இந்திய குடிமைப் பணிக்கான முதல் நிலை தேர்வு இன்று நடைபெற உள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 12 மையங்களில் இந்த தேர்வு நடைபெறவுள்ளது.

இதில், வேலூரில் 8 மையங்கள், காட்பாடியில் 3 மையங்கள் குடியாத்தம் செவன்த்டே பள்ளி என மொத்தம் 12 மையங்களில் நடைபெற உள்ள தேர்தவில் 3,234 பேர் பங்கேற்க உள்ளனர்.

இவர்களில், வேலூர் டி.கே.எம் மகளிர் கல்லூரியில் 4 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 8 பேர் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். தேர்வுகள் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை முதல் தாள் தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெற உள்ளது. தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வர்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன் பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஒவ்வொரு அறையிலும் 24 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வில் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உடன் எடுத்துச்செல்ல அனுமதியில்லை.

வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள குடிமைப் பணி தேர்வு ஒருங்கிணைப்பாளராக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். யு.பி.எஸ்.சி தேர்வு கண்காணிப்பு சிறப்பு அலுவலராக ஹர்பிரீத் சிங், தேர்வு பார்வையாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி வள்ளலார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்