வேலூர், தி.மலை மாவட்டங்களில் இன்று - 2,075 முகாம்களில் கரோனா தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் 5-வது மாபெரும் சிறப்பு முகாம் இன்று நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் சற்று பின்னடைவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனை சரி கட்டும் வகையில் மாவட்டம் முழுவதும் இன்று 1,000 முகாம்கள் மூலம் சுமார் 60-70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளனர். கையிருப்பில் 1 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இருக்கும் நிலையில் இன்று நடைபெறும் முகாமில் திட்டமிட்டபடி இலக்கை கடக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 1,075 இடங்களில் 5-வது கட்டமாக கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தி.மலை மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்ற நிலையை விரைவில் அடைய பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்