தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களை ஊக்குவிக்க - குலுக்கல் முறையில் 6 பேருக்கு ரூ.3,000 மதிப்பில் பரிசுக் கூப்பன் : நீலகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளும்‌ இணை நோய்‌ உள்ளவர்கள் 3 பேர் மற்றும் 18 வயது நிரம்பிய இளைஞர்களில்‌ 3 பேர் என குலுக்கல்‌ முறையில்‌ 6 பேர் தேர்வு செய்யப்பட்டு, விருதும், ரூ.3,000 மதிப்பிலான பரிசுக் கூப்பனும் மாவட்ட நிர்வாகத்தின்‌ சார்பில் வழங்கப்படும்‌ என ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில்‌ நாளை (அக்.10) கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்‌ நடக்க உள்ள நிலையில், நீலகிரி ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில், தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களை ஊக்குவிக்கும்‌ விதமாக முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளும்‌ இணை நோய்‌ உள்ள நபர்களில்‌ குலுக்கல்‌ முறையில்‌ மூன்று நபர்கள்‌ தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு, ‘பிரேவ்‌ ஹார்ட்‌’ விருதும்‌, ரூ.3,000-க்கானபரிசுக்கூப்பனும் வழங்கப்படும்‌. அதேபோல 18 வயது நிரம்பி, முதல்‌தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்‌ இளைஞர்களில்‌ மூவர்‌ குலுக்கல்‌ முறையில்‌தேர்வு செய்யப்பட்டு, ‘பொறுப்புள்ள 18’ என்ற விருதும்‌ ரூ.3,000 பரிசுக் கூப்பனும் மாவட்ட நிர்வாகத்தின்‌ சார்பாக வழங்கப்படும்‌.

இதுதவிர ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சி மற்றும்‌ கிராம பஞ்சாயத்துகளில்‌ முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்‌ நபர்களை ஊக்குவிக்கும்‌ விதமாகஅந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின்‌ சார்பாக சிறப்புப்பரிசுகள்‌வழங்க ஏற்பாடுகள்‌ செய்யப் பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

302 தடுப்பூசி முகாம்கள்

நீலகிரி மாவட்டத்தில் நாளை (அக்.10) தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 292 நிலையான கரோனா தடுப்பூசி முகாம்கள்‌, 20 நடமாடும்‌ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாமில்‌ தடுப்பூசி செலுத்துபவர்‌ (கிராம சுகாதார செவிலியர்‌/ செலிவியர்‌), தரவு பதிவாளர்‌, அங்கன்வாடி பணியாளர்கள்‌ (பயனாளிகளை அழைத்துவர) என மொத்தம்‌ நான்கு பணியாளர்கள்‌ ஒவ்வொரு முகாமிலும் பணியில் இருப்பார்கள்‌. மொத்தமாக 312 முகாம்களுக்கு 1,180 பணியாளர்கள்‌ பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்