டிஆர்டிஓ நடத்திய போட்டியில் தேர்வு - சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலை. பேராசிரியருக்கு பாராட்டு :

By செய்திப்பிரிவு

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), `டேர் டூ டிரீம் 2.0' என்னும் அகில இந்திய அளவிலான போட்டியை அறிவித்திருந்தது. இப்போட்டி, பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் புதுமையை புகுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்டது.

மேலும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் தொலைநோக்கு சிந்தனையைப் போற்றுவதும் இப்போட்டியின் நோக்கமாகும். அவரது 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியில் நாடு முழுவதும் இருந்து பலர் கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் கலந்துகொண்ட சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஜேம்ஸ் பாஸ்கர தாஸ், “மின்னணு ஆதரவு அமைப்புகளுக்குரிய எல்பிஐ ரேடார் சமிக்ஞைகளுக்கான கண்டறிதல் மற்றும் வகைப்படுத்தும் வழிகள்” என்ற தலைப்பில் திட்ட முன்மொழிவு அனுப்பியிருந்தார். மறுசீரமைக்கக்கூடிய ரிசீவர் கட்டமைப்பை பற்றிய இவரது திட்டத்துக்கு தனிமனித பிரிவில் 2-ம் இடம் கிடைத்ததால், அவரை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டி கவுரவித்தார்.

மேலும், இவரது திட்டத்தில் உள்ள தொழில்நுட்பம், நமது பாதுகாப்பு துறையின் கண்காணிப்புக்கு பெரிதும் உதவும். இந்த தொழில்நுட்ப யோசனை பரிசீலிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்